ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 20.3.2018 முதல் 26.3.2018 வரை

Published On 2018-03-20 04:15 GMT   |   Update On 2018-03-20 04:15 GMT
மார்ச் மாதம் 20-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி மார்ச் மாதம் வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
20-ந்தேதி (செவ்வாய்) :

* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜ அலங்காரம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் இரவு சிம்ம வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

21-ந்தேதி (புதன்) :

* சதுர்த்தி விரதம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ண அவதாரத்தில் திருக்காட்சி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை பள்ளியறை சேவை, இரவு கோ ரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருச்சி தாயுமானவர், திரவாரூர் தியாகராஜர், திருச்சுழி திருமேனிநாதர், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர், சென்னை * மல்லீஸ்வரர் ஆகிய கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்நோக்கு நாள்.

22-ந்தேதி (வியாழன்) :


* கார்த்திகை விரதம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை நவநீத சேவை, வெண்ணெய் தாழி சேவை, இரவு தங்கக் குதிரையில் ராஜாங்க அலங்காரம்.
* திருப்புல்லாணி ஜெகநாதர் ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம், சூரிய பிரபையில் சுவாமி வீதி உலா.
* திருவாரூர் தியாகராஜர் இந்திர விமானத்தில் புறப்பாடு.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கிருஷ்ண அவதாரத்தில் காட்சி தருதல்.
* திருச்சி தாயுமானவர் கோவிலில் சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

23-ந்தேதி (வெள்ளி) :

சஷ்டி விரதம்.
திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ரத ஊர்வலம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையிலும், பெருமாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
பரமக்குடி முத்தாலம்மன் கோவில், ராமகிரி கல்யாண நரசிம்ம பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் தொடக்கம்.
காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.
மேல்நோக்கு நாள்.



24-ந்தேதி (சனி) :

* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் கருட சேவை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வேணுவன லிங்ககோற்பதி ரிஷப வாகனத்தில் பவனி.
* ராமகிரி கல்யாண நரசிம்ம பெருமாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், ஆண்டாள் திருக்கோலம்.
* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (ஞாயிறு) :

* ராம நவமி.
* குன்றக்குடி முருகப்பெருமான் ஆலயத்தில் வள்ளி திருக்கல்யாணம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.
* திருப்புல்லாணி ஜெகநாதர் ஆலயத்தில் கருட சேவை.
* பரமக்குடி முத்தாலம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று உற்சவம்.
* பழனி முருகப்பெருமான் வெள்ளி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
* காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி வருதல்.
* மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் மாலை தங்கச் சப்பரத்திலும், இரவு கண்ணாடி சப்பரத்திலும் வீதி உலா.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அம்ச வாகனத்திலும், ரெங்கமன்னார் கருட வாகனத்திலும் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா.
* திருச்சுழி திருமேனிநாதர் ஆலயத்தில் சுவாமி ரிஷப வாகனத்தில் வலம் வருதல், அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News