ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 13-3-2018 முதல் 19-3-2018 வரை

Published On 2018-03-13 04:43 GMT   |   Update On 2018-03-13 04:43 GMT
மார்ச் 13-ம் தேதியில் இருந்து மார்ச் 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
13-ந்தேதி (செவ்வாய்) :

* சர்வ ஏகாதசி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தில் காலை பல்லக்கு ஊர்வலம், இரவு சுவாமிக்கு ராஜாங்க அலங்காரம்.
* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (புதன்) :

* காரடையான் நோன்பு.
* பிரதோஷம்.
* திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ரிஷிமுக பர்வதம் பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

15-ந தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* மாத சிவராத்திரி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.

16-ந்தேதி (வெள்ளி) :

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவல்லி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருவிடைமருதூர் பிரகத் குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.



17-ந்தேதி (சனி) :

* அமாவாசை
* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி சேஷ வாகனத்தில் பரமபத நாதர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

18-ந்தேதி (ஞாயிறு) :

* திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வைர முடி சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் வைகுண்ட நாதர் சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன், மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

19-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காலிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோல காட்சி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவிலில் மூன்று மாத உற்சவம் தொடக்கம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News