ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 13.2.2018 முதல் 19.2.2018 வரை

Published On 2018-02-13 03:34 GMT   |   Update On 2018-02-13 03:34 GMT
பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 19-ம் தேதி வரை நடக்க உள்ள முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
13-ந் தேதி (செவ்வாய்) :

* மகா சிவராத்திரி.
* பிரதோஷம்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் பத்திர தீபம் உற்சவம் ஆரம்பம்.
* திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுக அர்ச்சனை.
* மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலில் திருவிழா.
* கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் பூசாற்று விழா.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (புதன்) :

* சாம்பல் புதன்.
* சிரவண விரதம்.
* திருகோகர்ணம், காளகஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம், ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
* ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

15-ந்தேதி (வியாழன்) :

* அமாவாசை.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் பத்திர தீபம்.
* ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி- அம்பாள் காலையில் இந்திர விமானத்திலும், இரவு தங்க விருட்ச வாகனத்திலும் புறப்பாடு.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
* திருகோகர்ணம், காளகஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* மேல்நோக்கு நாள்.

16-ந்தேதி (வெள்ளி) :


* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் தெப்ப உற்சவம்.
* திருவைகாவூர், வேதாரண்யம் ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட சேவை.
* மேல்நோக்கு நாள்.



17-ந்தேதி (சனி) :

* சந்திர தரிசனம்.
* திருகோகர்ணம், காளகஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம் ஆகிய தலங்களில் சிவபெருமான் கிரிவலம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் தெப்ப உற்சவம்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.

18-ந்தேதி (ஞாயிறு) :

* திருநெல்வேலி மேலரத வீதி பரமேஸ்வரி அம்பாள் கோவில் வருசாபிஷேகம்.
* காளகஸ்தி, ஸ்ரீசைலம், வேதாரண்யம் ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
* கீழ்நோக்கு நாள்.

19-ந்தேதி (திங்கள்) :


* முகூர்த்த நாள்.
* சதுர்த்தி விரதம்.
* ஸ்ரீசைலம், காளகஸ்தி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News