ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 30.1.2018 முதல் 5.2.2018 வரை

Published On 2018-01-30 04:03 GMT   |   Update On 2018-01-30 04:03 GMT
30.1.2018 முதல் 5.2.2018 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
30-ந்தேதி (செவ்வாய்) :

* திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப்பெருமாள் கோவிலில் வருசாபிசேகம்.
* பழனியில் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கதிர் அறுப்பு நிகழ்வு.
* திருச்சேறை சாரநாதர் காலை எண்ணெய்த் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* கோவை பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்.
* குன்றக்குடி, திருப்புடைமருதூர், திருவிடை மருதூர் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.

31-ந்தேதி (புதன்) :

* தைப்பூசம்.
* பவுர்ணமி விரதம்.
* உவரி சுயம்புலிங்க சுவாமி ரத உற்சவம்.
* திருச்சேறை சாரநாதர் கோவிலில் ரத உற்சவம்.
* வடலூர் ராமலிங்க அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
* கோவை பாலதண்டாயுதபாணி, மருதமலை, பழனி ஆகிய தலங்களில் முருகன் ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க குதிரையிலும், அம்பாள் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி தெப்ப உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (வியாழன்) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.
* கோவை தண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலவர் ஆகிய தலங்களில் தெப்ப உற்சவம்.
* பழனி முருகப்பெருமான் தங்கக் குதிரையில் பவனி.
* திருச்சேறை சாரநாதர் கோவிலில் சப்தா வரணம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (வெள்ளி) :

* கோவை பாலதண்டாயுதபாணி மகா தரிசனம்.
* பழனி முருகப்பெருமான் பெரிய தங்க மயில் வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.



3-ந்தேதி (சனி) :

* சங்கடஹர சதுர்த்தி.
* பழனி முருகப்பெருமான் காலை தோளுக்கினியானில் பவனி, இரவு தெப்ப தேர் விழா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் ரத உற்சவம்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

4-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில் வருசாபிசேகம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (திங்கள்) :

* முகூத்த நாள்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News