ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் - 16.1.2018 முதல் 22.1.2018 வரை

Published On 2018-01-16 05:34 GMT   |   Update On 2018-01-16 05:34 GMT
16.1.2018 முதல் 22.1.2018 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.










16-ந்தேதி (செவ்வாய்) :

* தை அமாவாசை
* மதுரை செல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் பவனி, இரவு பட்டாபிஷேகம்.
* நெல்லை நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீபம்.
* திருவாவடுதுறை சிவபெருமான் பவனி.
* மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரீடம் சாற்றி அருளல்.

17-ந்தேதி (புதன்) :

* மதுரை செல்லத்தம்மன் ரதோற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
* கல்லிடைக்குறிச்சி சிவ பெருமான் பவனி.

18-ந்தேதி (வியாழன்) :

* சந்திர தரிசனம்.
* திருவோண விரதம்.
* மதுரை செல்லத்தம்மன் இரவு புஷ்ப சப்பரம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் உற்சவம் ஆரம்பம்.
* திருமொச்சியூர் சிவபெருமான் பவனி.
* சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* உப்பிலியப்பன் சீனிவாச பெருமாள் புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

19-ந்தேதி (வெள்ளி) :

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூதவாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
* திருவாவடுதுறை சிவபெருமான் பவனி.
* ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* திருவள்ளூர் வீரராகவர் ரதோற்சவம்.



20-ந்தேதி (சனி) :

* மதுரை மீனாட்சி சுந்தரரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
* கற்பக விருசப சிம்ம வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் வரதராச மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சூரியநயினார் கோவிலில் சிவபெருமான் பவனி.
* திருநள்ளார் சனி பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

21-ந்தேதி (ஞாயிறு) :

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க சப்பரம்.
* திருமொச்சியூர் சிவபெருமான் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்ச நேயருக்கு திருமஞ்சன சேவை.

22-ந்தேதி (திங்கள்) :

* திருநெல்வேலி சாலைக் குமாரசுவாமி வருசாபிஷேகம்.
* நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
* குன்றக்குடி, பழநி, சுவாமிமலை கோவில்களில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி அம்பாள் காமதேனு வாகனத்தில் பவனி.
Tags:    

Similar News