ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (26.12.2017 முதல் 1.1.2018 வரை)

Published On 2017-12-26 04:07 GMT   |   Update On 2017-12-26 04:07 GMT
26.12.2017 முதல் 1.1.2018 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
26-ந்தேதி (செவ்வாய்) :

* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுரசம்ஹார லீலை, இரவு கயிலாய பர்வத வாகனத்தில் சுவாமி வீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் உற்சவ சேவை.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

27-ந்தேதி (புதன்) :

* திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை வெள்ளி சிவிகையில் பவனி, மாலை சிவ பூஜை.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவர்த்தன கிரிமலையைத் தூக்கும் லீலை.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.
* சமநோக்கு நாள்.

28-ந்தேதி (வியாழன்) :

* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி பவனி.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்தி களுடன் ரத உற்சவம்.
* சிதம்பரம் சிவபெருமான் விருட்ச வாகனத்தில் புறப்பாடு.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாலை முத்துக்குறி கண்டருளல்.
* சமநோக்கு நாள்.

29-ந்தேதி (வெள்ளி) :

* வைகுண்ட ஏகாதசி.
* சகல விஷ்ணு ஆலயங்களிலும் இராப்பத்து உற்சவம் ஆரம்பம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை உத்திராச விமானத்தில், பிட்டுக்கு மண் சுமந்தருளிய காட்சி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.



30-ந்தேதி (சனி) :

* சனிப் பிரதோஷம்.
* சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
* வீரவநல்லூர் சுவாமி விசேஷ அலங்கார சப்பரத்தில் பவனி.
* திருநெல்வேலி நெல்லையப்பர், சங்கரன்கோவில் சங்கரலிங்க பெருமான் ஆகிய தலங்களில் சுவாமி வீதி உலா.
* நாச்சியார்கோவில் எம்பெருமாள் தெப்ப உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

31-ந்தேதி (ஞாயிறு) :

* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ரத உற்சவம், மாலை ஆனந்த தாண்டவ காட்சி.
* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் உற்சவ சேவை.
* சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் காட்சி.
* திருநெல்வேலி, குற்றாலம், வீரவநல்லூர் ஆகிய தலங்களில் சுவாமி வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (திங்கள்) :

* ஆங்கில வருடப்பிறப்பு.
* பவுர்ணமி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரவு நடராஜர் மகா அபிஷேகம்.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதம்.
* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரம்.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News