ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (11.7.2017 முதல் 17.7.2017 வரை)

Published On 2017-07-11 04:21 GMT   |   Update On 2017-07-11 04:21 GMT
11.7.2017 முதல் 17.7.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
11-ந்தேதி (செவ்வாய்) :

* திருவோண விரதம்.
* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி, திருவல்லிக் கேணி அழகிய சிங்கர் ஆகிய தலங்களில் உற்சவ தீர்த்தவாரி.
* சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

12-ந்தேதி (புதன்) :

* சங்கடஹர சதுர்த்தி.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவரணம்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.



13-ந்தேதி (வியாழன்) :

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (வெள்ளி) :

* திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

15-ந்தேதி (சனி) :

* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.



16-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* ராமேஸ்வரம் சேது மாதவ சன்னிதிக்கு விநாயகர் பெருமாள் எழுந்தருளி சிறப்பு ஆராதனை.
* ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* சமநோக்கு நாள்.

17-ந்தேதி (திங்கள்) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சினேக வள்ளியம்மன், நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் உற்சவம் தொடக்கம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News