ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (13.6.2017 முதல் 19.6.2017 வரை)

Published On 2017-06-13 02:54 GMT   |   Update On 2017-06-13 02:54 GMT
13.6.2017 முதல் 19.6.2017 வரை வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
13-ந்தேதி (செவ்வாய்) :

* சங்கடஹர சதுர்த்தி.
* சோழவந்தான் ஜெனக மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.
* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் காலை ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் பவனி.
* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* சிரவண விரதம்.
* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஆடும் பல்லக்கில் தீர்த்தவாரி.
* சோழவந்தான் ஜெனக மாரியம்மன் ஊஞ்சல் சேவை.
* கீழ்திருப்பதி கல் வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

15-ந்தேதி (வியாழன்) :

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.



16-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

17-ந்தேதி (சனி) :

* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* இன்றைய தினம் விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது.
* இன்று கருட தரிசனம் சிறப்பான வாழ்வு தரும்.
* கீழ்நோக்கு நாள்.



18-ந்தேதி (ஞாயிறு) :

* திருப்பதி ஏழுமலையப்பன், மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* மேல்நோக்கு நாள்.

19-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

Tags:    

Similar News