ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (16.5.2017 முதல் 22.5.2017 வரை)

Published On 2017-05-16 03:52 GMT   |   Update On 2017-05-16 03:52 GMT
16.5.2017 முதல் 22.5.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
16-ந்தேதி (செவ்வாய்) :

* காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் ரத உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் பெருவிழா.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.

17-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* சிரவண விரதம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் விடையாற்று உற்சவம்.
* காரைக்குடி கொப்புடையம்மன் யானை வாகனத்தில் பவனி.
* கீழ்திருப்பதி கல் வேங்கடேசர் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, நான்கு மாடவீதி புறப்பாடு கண்டருளல்.
* சாத்தூர் வேங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

18-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் தெப்ப உற்சவம், அம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாஞ்சலி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

19-ந்தேதி (வெள்ளி) :

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* மேல்நோக்கு நாள்.



20-ந்தேதி (சனி) :

* குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை.
* இன்று கருட தரிசனம் நன்று.
* விஷ்ணு தலங்களில் இன்று வழிபாடு செய்தால் சிறப்பு வந்து சேரும்.
* மேல்நோக்கு நாள்.

21-ந்தேதி (ஞாயிறு) :

* தத்தாத்ரேயர் ஜெயந்தி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* கீழ்நோக்கு நாள்.

22-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News