ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (9.5.2017 முதல் 15.5.2017 வரை)

Published On 2017-05-09 04:00 GMT   |   Update On 2017-05-09 04:00 GMT
9.5.2017 முதல் 15.5.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
9-ந்தேதி (செவ்வாய்) :

* நரசிம்மர் ஜெயந்தி.
* நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.
* மதுரை கள்ளழகர் தல்லாகுளத்தில் எதிர் சேவை.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி விருட்ச சேவை.
* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் புஷ்ப விமானத்தில் வீதி உலா.
* திருச்சி தாயுமானவர் ஆலயத்தில் விடையாற்று உற்சவம்.
* சமநோக்கு நாள்.

10-ந்தேதி (புதன்) :

* சித்ரா பவுர்ணமி.
* காஞ்சீபுரம் சித்ரகுப்தர் திருக்கல்யாணம்.
* மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார முத்துப் பல்லக்கில் பவனி.
* விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் நிறைவு விழா.
* சமநோக்கு நாள்.

11-ந்தேதி (வியாழன்) :

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப பல்லக்கில் பவனி.
* காரைக்குடி கொப்புடையம்மன் அம்ச வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

12-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* மதுரை கள்ளழகர் காலை மோகன அவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் சன்னிதி தெருவில் ரத உற்சவம்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம்.
* காரைக்குடி கொப்புடையம்மன் கயிலாச வாகனத்தில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.



13-ந்தேதி (சனி) :

* மதுரை கள்ளழகர் திருமலைக்கு எழுந்தருளல்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத உற்சவம்.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி வரும் காட்சி.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* சமநோக்கு நாள்.

14-ந்தேதி (ஞாயிறு) :

* சங்கடஹர சதுர்த்தி.
* வீரபாண்டி கவுமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியில் பவனி, இரவு மேற்கு ரத வீதியில் புறப்பாடு.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி விருட்ச வாகனத்தில் திருவீதி உலா.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கண்ணாடி பல்லக்கில் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

15-ந்தேதி (திங்கள்) :

* சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மேற்கு ரத வீதியில் இருந்து நிலைக்கு வருதல், இரவு மின் விளக்கு அலங்காரத்துடன் முத்துச்சப்பரத்தில் தேர் தடம் பார்த்தல்.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News