ஆன்மிகம்

மகிழ்வான வாழ்வு தரும் விரத வழிபாடு

Published On 2019-05-20 08:49 GMT   |   Update On 2019-05-20 08:49 GMT
குழந்தை இல்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்து, ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் வாரிசுகள் உருவாகும் என்பது நிச்சயம்.
இந்த உலகத்தைப் படைப்பதற்காக, உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு கும்பத்தில் வைத்து, அதை நீரில் மிதந்து வரச் செய்தனர். அப்பொழுது இறைவன் அந்தக் கும்பத்தை அம்பால் எய்ய, கும்பத்தில் இருந்த கூம்புபோன்ற கோணப்பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே இப்பொழுது ‘கும்பகோணம்’ என்று திருத்தலப் பெயர் பெற்று விளங்குகிறது.

அங்கு “மகா மகப் பெருவிழா” மிகச் சிறப்பாக நடைபெறும். இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றது. மற்ற ஆண்டுகளில் மாசி மாத மகம் நட்சத்திரம் அன்று, நாம் தெய்வங்களை வழிபட்டாலே தித்திப்பான வாழ்க்கை அமையும். குறிப்பாக சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபடுவது நல்லது. அன்றைய தினம் குழந்தை இல்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்ன தானம் செய்து, ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் வாரிசுகள் உருவாகும் என்பது நிச்சயம்.

ஒவ்வொரு மாதத்திலும் “மகம்” நட்சத்திரம் வரும். ஆனால் மாசி மாதத்தில் வரும் ``மகம்” நட்சத்திரம் மட்டுமே “மாசி மகம்” என்று அழைக்கப்படுகிறது. ‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. 
Tags:    

Similar News