ஆன்மிகம்

சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதம் பற்றிய அரிய தகவல்கள்

Published On 2019-04-02 08:55 GMT   |   Update On 2019-04-02 08:55 GMT
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் மிகவும் முக்கியமானதும், சிறப்பானதும் பிரதோஷம் விரதம். பிரதோஷ விரதம் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
குற்றமற்ற நேரம் :

தோஷம் என்றால் குற்றம் என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம். அந்த குற்றமற்ற நேரத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவது சிறப்பு. ஆகவேதான் பிரதோஷ விரத வழிபாட்டுக்கு மகத்துவம் அதிகம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்தது சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், 140 பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்ட புண்ணியம் கிடைக்கும் என்பது சிவனடியார்களின் வாக்காகும்.

சனிப் பிரதோஷம் :

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷ விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சனிக் கிழமையில் வந்தால் அது ‘மகாப் பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும். அதுவே சனிக்கிழமை வரும் மகாப் பிரதோஷத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால், 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

சிறப்பு தரும் பால் அபிஷேகம் :

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.
Tags:    

Similar News