ஆடி மாதத்தில் சுக்ரனுக்குரிய நட்சத்திரமான பூரம் வரும் நாள் தான் ஆடிப்பூரம். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபாடு செய்தால் வாரிசு உருவாகும்.
அன்று திருக்கோவில்கள் தோறும் உற்சவம் நடைபெறும். மனித தெய்வ வழிபாடுகளும் செட்டிநாட்டு பகுதிகளில் நகரத்தார்கள் படைப்புகள் என்று கொண்டாடி வருகிறார்கள்.
இந்த பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சை பயிறை தண்ணீரில் நனைய வைப்பர். ஆடிப்பூரத்தன்று அது நன்கு முளைக்கட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து விட்டு நம்பிக்கையோடு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சாப்பிட்டால் வாரிசு உருவாகும்.