ஆன்மிகம்

ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது

Published On 2019-06-05 06:00 GMT   |   Update On 2019-06-05 06:00 GMT
இஸ்லாமிய மாதங்கள் வரிசையில் ஒன்பதாவதாக வருவது ரம்ஜான் மாதமாகும். ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது. சிறப்புமிக்கதாகும்.
இஸ்லாமிய மாதங்கள் வரிசையில் ஒன்பதாவதாக வருவது ரம்ஜான் மாதமாகும். ரம்ஜான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் சூர்யோதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருக்கின்றனர், இம்மாதத்தின் இறுதியில் பத்தாவது மாதமான ஷவ்ராலின் முதல் நாள் அன்று ஈதுல் பிதர் என்னும் ஈகை திருநாளை பெருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். எதற்காக நோன்பிருக்க வேண்டும் என்பதை திருக்குரான் கூறுகிறது.

நோன்பு வைப்பவர் வெறும் பட்டினி கிடந்து நேரத்தை கடத்துவது சிறப்பு அல்ல. அப்படி பட்டினியாகும் சமயங்களில் மற்றவைகள் மீது கோபப்படுதல், பொறாமை படுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், வீண் விவாதங்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். நோன்பு வைப்பவர்களின் இறைஞ்சுதலை (துவா) அல்லா மறுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக செல்வ செழிப்பில் இருக்கும் பணக்காரர்களும் பசியின் கொடுமையை உணர்ந்து அப்பசியிலே தினம் வாடும் ஏழையை கண்டு இரங்கும் மனப்பக்குவத்தையும் ஏற்படுத்துகிறது. நோன்பு வயதுக்கு வந்த ஆண், பெண் இருவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

பசி, பட்டினி, துக்கம், கவலை, வறுமை என்று தவித்து கொண்டு இருக்கும் ஏழை, எளிய சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர் உள்ள ஏழைகளுக்கு ஜகாத் ஆகியவை கொடுப்பதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். பிறகு அனாதைகள், விதவைகள், ஊனமுற்றோர் மற்றும் ஏழை மாணவர்கள் என மார்க்க அறிஞர்கள் வழிகாட்டுதல்படி வழங்க வேண்டும். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கோ பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கினால் ஜகாத் நிறைவேறாது.

மனிதன் தனது பொருளில் தானே விரும்பி கொடுப்பது தர்மம். அதிலும் குறிப்பிட்ட அளவு நகை, பணம் இருந்தால் (ஒரு ஆண்டுக்கு கடன் இல்லாமல் இருந்தால்) அதில் இருந்து இரண்டரை சதவீதம் வரை கொடுப்பது ஜகாத் ஆகும். ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது. இந்தப் புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் புனித திருக்குரான் இறக்கப்பட்டது. இந்த மாதத்தில்தான் ஆயிரம் மாதத்திற்கு ஈடான லைத்துல்கதர் என்று 27-வது இரவு சிறப்புமிக்கதாகும்.

பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னாள் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) நிர்ணயிக்கப்படுகின்ற கோதுமை அல்லது அதற்குரிய பணம் அப்பகுதியில் வாழும் எழை, எளிய மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
Tags:    

Similar News