ஆன்மிகம்

ஜகாத்தின் முக்கிய சட்டங்கள்

Published On 2019-06-05 04:11 GMT   |   Update On 2019-06-05 04:11 GMT
ஜகாத் வளரும் பொருட்கள் மீது மட்டுமே கடமை. சொந்த உபயோகத்தில் உள்ள பண்டப்பாத்திரங்களுக்கும் ஜகாத் இல்லை.
ஜகாத் வளரும் பொருட்கள் மீது மட்டுமே கடமை. வளரும் பொருட்கள் என்பது:- வியாபாரச் சரக்குகள், கால்நடைப் பிராணி, தங்கம் வெள்ளி. சொந்த உபயோகத்தில் உள்ள பண்டப்பாத்திரங்களுக்கும் ஜகாத் இல்லை. சொந்த உபயோகத்தில் உள்ள ஆலைகள், தொழிற்சாலைகளுக்கு ஜகாத் இல்லை. ஆனால் மேற் கூறியவற்றை விற்பனைக்காக வைத்து இருந்தால் ஜகாத் கடமையாகும்.

ஜகாத் கடமையில்லாதவர் ஓர் ஆலையை வாங்கினால் உடனடியாக ஜகாத் கடமை இல்லை. ஒரு வருடம் பூர்த்தியான பின் ஜகாத் கடமை உள்ளது. மோட்டார் சைக்கிள், கார் போன்றவைகளின் மீது ஜகாத் இல்லை. வியாபார சரக்குகளின் தங்கம், வெள்ளியின் கிரயத்தை எட்டினால் ஜகாத் உண்டு. அலமாரிகள், ஷோ-கேஸ் ஆகியவற்றிற்கு ஜகாத் இல்லை. ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகளுக்கு ஜகாத் இல்லை.

அதற்கான வாடகையை வசூலித்தால் ஜகாத் உண்டு. உற்பத்தி பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு ஜகாத் உண்டு. பணம் கிடைத்ததிலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டும். நிய்யத்தில்லாமல் ஒருவர் சொத்தை யெல்லாம் தர்மஞ் செய்தாலும் அது ஜகாத் ஆகாது. ஏனெனில் ஜகாத்திற்கு நிய்யத்து கட்டாயக் கடமை. அன்னதானம் செய்வது ஜகாத் ஆகாது. கட்டிடங்கள் கட்டுவதற்கு ஜகாத் கொடுக்கக்கூடாது.

பள்ளிவாசல் கட்டிட மதரஸாக்கள் கட்டிட ஜகாத் கொடுக்கக்கூடாது. வீடுகளைக் கட்டிக் கொடுத்தால் ஜகாத் ஆகாது. அவ்வீடுகளில் எளியோரை அமர வைத்து உரிமையாக்கினால் ஜகாத் ஆகும். ஆஸ்பத்திரி கட்டுவதற்கு ஜகாத் கொடுக்கக் கூடாது. மருந்துகள் வாங்கிக் கொள்ள ஜகாத் கொடுக்கலாம். வட்டியில்லாக் கடன் கொடுப்பது ஜகாத் ஆகாது. ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள்-பகீர், மிஸ்கீன், முகாதப், கடனாளி, பீஸபிலில்லாஹ், இப்னுஸ்ஸபீப், ஆமில் ஆகியோர்.

இறந்தவருக்கு மரணச் செலவிற்காக ஜகாத் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. இறந்தவர்களின் கடனை ஜகாத்தைக் கொண்டு அடைக்கக் கூடாது. ஏனெனில், இவற்றில் எதுவும் உரிமையாளரைப் போய்ச் சேராது. மதரஸா மாணவருக்கு ஜகாத் கொடுக்கலாம். ஜகாத் பணத்தைக் கொண்டு ஸ்காலர் ஷிப் (கல்வி உதவித்தொகை) கொடுக்கலாம்.

கே.அப்துல்லா சேட் சவுத் இந்தியன் பிளைவுட்ஸ்
Tags:    

Similar News