ஆன்மிகம்

சுவனம் செல்ல இறைவன் காட்டிய வழிமுறைகள்

Published On 2019-05-24 07:08 GMT   |   Update On 2019-05-24 07:08 GMT
‘எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள்’ (திருக்குர்ஆன் 40:40)
புனித ரமலானில் நோக்கமே ‘ இறைவனின் நல்லடியார்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது தான்’. தனது நல்லடியார்கள் சுவனம் செல்ல எளிய வழிமுறைகளையும் இறைவன் தந்துள்ளான்.

அதில் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்விற்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பது. இதன் மூலம் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.

‘அல்லாஹ்புக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்’  என்று திருக்குர்ஆன் (3:132) வழிகாட்டுகிறது.

‘உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், கவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் திருக்குர்ஆன் (3:133) குறிப்பிடுகிறது.

மேலும், சொர்க்கம் செல்ல உதவும் நற்செயல்கள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘மேலும் எவர்கள்  நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள், முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு அவர்களுக்குக்கிடைத்துக்கொண்டே இருக்கும்)’.

‘எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள்’ (திருக்குர்ஆன் 40:40)

இறைவனின் நேசத்தைப்பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் திருக்குர்ஆன் (3:134) இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றார்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள், தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள், மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள், (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

அத்துடன் மறுமைநாளில் இறைவனின் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும், நமது நன்மை, தீமைக்கு ஏற்ப இறைவனிடம் கூலி கிக்கும் என்பதையும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப வாழ்பவர்களின் தங்குமிடம் சொர்க்கம் என்கிறது திருக்குர்ஆன்(79:40-41),

‘மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளை விட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ, அவனுடைய இருப்பிடம் கவனமாக இருக்கும்’.

இந்த புதிதமான ரமலான் காலத்திலும் நமது வாழ்நாள் முழுவதிலும் இறைவனுக்கு அஞ்சி நடந்து, நற்செயல்கள் செய்து சுவனத்தில் இடம்பெற நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும், ஆமீன்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
Tags:    

Similar News