நோயால் அவதிப்படுபவர்கள் சென்று வழிபட்டாலே நோய்கள் நீங்கும் அற்புத தலமாக காஞ்சிபுரம் அருள்மிகு ஜுரஹரேஸ்வர் திருக்கோயில் இருக்கிறது.
நமது புராணங்களும், ஆன்மீக பெரியோர்களும் நாம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நாம் இப்போது வாழும் வாழ்க்கை நிலை ஏற்படுகிறது என திடமாக கூறுகின்றனர். நமக்கு ஏற்படும் உடல் சார்ந்த நோய்கள் கூட அப்படி கர்ம வினைகளால் ஏற்படும் ஒன்றாக இருக்கிறது. இத்தகைய நோய்கள் ஏற்பட்டவர்கள் சென்று வழிபட்டாலே நோய்கள் நீங்கும் அற்புத தலமாக காஞ்சிபுரம் அருள்மிகு ஜுரஹரேஸ்வர் திருக்கோயில் இருக்கிறது.
சுமார் 2000 ஆண்டுகள் மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் ஜுரஹரேஸ்வர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் ஜுரஹரேஸ்வரர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் போன்று இக்கோயிலிலும் பிரணவாகார விமானம் கோபுரம் இருக்கிறது. இந்த கோபுரத்தில் நான்கு புறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல், ஜுரம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது இந்த கோபுர ஜன்னல் வழியே வருகிற காற்று, வெளிச்சம் போன்றவை பக்தர்களின் காய்ச்சல் போன்ற பல நோய்களை போக்குவதாக கூறப்படுகிறது. ஜுரம் காய்ச்சல் போன்ற பல நோய்கள் தீர இங்கு வந்து இறைவனை வேண்டிக்கொள்கின்றனர். பிராத்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோயில் முகவரி
அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரம்
தொலைபேசி எண் : 9443689978