ஆன்மிகம்

குழந்தைப்பேறு அருளும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

Published On 2019-03-05 08:10 GMT   |   Update On 2019-03-05 08:10 GMT
குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன்மனைவி பிரச்சனை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் சிறுவாச்சூர் செல்லியம்மன் கோவில்.
காளியின் அருளால் மதுரையை எரித்தாள் கண்ணகி. அங்கிருந்து சிறுவாச்சூர் செல்லியம்மன் ஆலயத்திற்கு வந்தாள். செல்லியம்மனோ நீ இங்கு இருக்க வேண்டாம். என்னிடமிருந்து வரம் பெற்ற அரக்கன் ஒருவன் என்னையே அடிமைப்படுத்தி வைத்துள்ளான். கொடுத்த வரத்தை கொடுஞ்செயலுக்கு உபயோகப்படுத்துகிறான். எனவே, நீ இங்கிருந்து சென்று விடு தாயே என்றாள். கண்ணகி கண்கள் மூடி காளியை வணங்கினாள். அரக்கன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள். வந்த அரக்கனும் அகம்பாவத்துடன் பேச அங்கேயே அவனை காளி வதம் செய்தாள்.

செல்லியம்மன் மலைமீது குடிகொள்ள மதுரகாளியம்மன் என்ற திருப்பெயரோடு காளி கீழே குடிகொண்டாள். திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும். மாவிளக்கு ஏற்றினால் எண்ணமெல்லாம் ஈடேறும். ஆலய வளாகத்திலேயே உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கொண்டு வந்து ஊற வைத்து அங்கேயே இடித்து விளக்கேற்றுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன்மனைவி பிரச்சனை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது. திருச்சி - பெரம்பலூர் நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. 
Tags:    

Similar News