ஆன்மிகம்

தோஷங்களை நிவர்த்தி செய்யும் தாயத்து

Published On 2019-01-16 05:47 GMT   |   Update On 2019-01-16 05:47 GMT
மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்களுக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.
மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்கள் ஆகியோருக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.

* இதில் பரிகாரம் என்பது செம்பு வெள்ளி தங்கம் முதலிய உலோக தகடுகளில் சக்கரம் அல்லது கோடுகளைக் கீறி அந்த கட்டங்களுக்குள் மந்திர எண்எழுத்துக்களை பதித்து சிறு குழாயினுள் செலுத்தி பாதிப்புற்றவர்களின் உடலில் கை, கால்கள், இடுப்பு, புஜம், கழுத்து முதலிய இடங்களில் கட்டுவதாகும். இதனால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், கிரகதோஷம், நோய் இவற்றினால் வந்த பாதிப்பு நீங்கும், மற்றும் வசியம் உட்பட அஷ்ட கர்மங்கள் சித்தியும் ஆகும், தீயசக்தி விலகி செல்வசெழிப்பு உண்டாகும்.



* நஞ்சு முறிவிற்காக சில தெய்வீக மூலிகை வேர்களை தாயத்தில் அடைத்து மாந்திரீகம் செய்வோர், விஷக்கடி வைத்தியர், பாம்பாட்டிகள் ஆகியோர் தமது உடலில் அணிந்து கொள்வதாகும், இது தங்களை பாதுகாத்து கொள்வதற்கும், கடி விஷங்களை இறக்குவதற்கும் பயன்படுத்துவர்.

* கொடிக்குளிசம் என்பது சிறு குழந்தைகளுக்கு தொப்புள் கொடியை உலர்த்தி தாயத்தில் அடைத்து இடுப்பில் கட்டிவைத்தல், குழந்தைக்கு உடல்நிலை கோளாறோ அல்லது மாந்திரீக கோளாறோ ஏற்படும்போது அந்த தொப்புள் கொடியை பாலில் உரைத்து ஊட்டவோ அல்லது புகை போட்டு நாசியில் இழுக்க செய்யவோ பயன்படுத்துவர்.

* காப்புகட்டுதல் என்பது தெய்வீக மூலிகைகளின் சாப நிவர்த்திக்காகவும், அவற்றின் முழுபயனை பெறுவதற்காகவும் மந்திர சாஸ்திரப்படி அவற்றிற்கு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுவதாகும்.
Tags:    

Similar News