இன்பம்-துன்பம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பதை உணர்ந்திடுவோம். அதற்கேற்ப நமது வாழ்வினை அமைத்து கொள்வோம்.
சிலநாட்கள் கடந்து காணாமல் போன குதிரை தன்னுடன் வேறு 3 குதிரைகளை அழைத்து கொண்டு விவசாயியின் வீட்டுக்கு வந்தது. இப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உனக்கு 4 குதிரை கிடைத்து விட்டதே. நீ ராசிக்காரன் தான் என புகழ ஆரம்பித்தனர்.
நான்கு குதிரைகளை பார்த்த விவசாயியின் மகன், குதிரை சவாரிக்கு தயார் செய்து புறப்பட்டான். அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் கீழே விழுந்து கால்கள் உடைந்து போய்விட்டது. இதனை கேள்வியுற்ற அக்கம் பக்கத்தினர் உமக்கு ஒரு நல்லது நடந்தால், உடனே ஒரு தீமையும் நடக்கிறதே என கூறி ஆதங்கப்பட்டனர். இப்போதும் விவசாயி எதற்கும் கலங்காது இயல்வாகவே தனது பணியினை தொடர்ந்து கொண்டே இருந்தார்.
வாழ்வில் இயல்புகளை முழுமையாக புரிந்து கொண்டவர் விவசாயி. ஆதலால் தான் எல்லா சூழல்களிலும அவரால் இயல்பாக இருக்க முடிந்தது. நல்லது கெட்டது இரண்டையும் சரி சமமாக அணுக முடிந்தது. வாழ்வு என்பதும் ஒவ்வொரு நாளும் நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான வாழ்க்கை பாடங்களை கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. இதனை மிக சரியாக புரிந்து கொண்டாலே வாழ்வினை சரியாக நம்மால் எதிர்கொள்ள முடியும். இன்பம்-துன்பம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பதை உணர்ந்திடுவோம். அதற்கேற்ப நமது வாழ்வினை அமைத்து கொள்வோம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்
கோட்டார் மறைமாவட்டம்