ஆன்மிகம்

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2019-06-03 03:42 GMT   |   Update On 2019-06-03 03:42 GMT
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, தட்டு சப்பரபவனி, தொடர்ந்து தூத்துக்குடி ஆயர் இல்ல அருட்பணியாளர் கிறிஸ்டியான் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மறையுரையாற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

11-ந்தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் ஜெபநாதன் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு வடக்கன்குளம் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜாண்பிரிட்டோ தலைமையில் நற்கருணை பவனி, 12-ந்தேதி இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, இரவு 9.30 மணிக்கு தேர் பவனி, 13-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை அருட்பணியாளர் டெரன்ஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி, காலை 7 மணிக்கு அழகப்பபுரம் அருட்பணியாளர்கள் கலந்து கொள்ளும் திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்ரோ சர்ச்சில், பங்கு பேரவை துணை தலைவர் சேவியர் மணி, செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்லத்துரை, இணை செயலாளர் கீவன்மேரி மற்றும் நிதிக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News