ஆன்மிகம்

சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய விழா தொடங்கியது

Published On 2019-05-11 03:21 GMT   |   Update On 2019-05-11 03:21 GMT
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெற்றது. கொடியேற்றத்துக்கு கன்னியாகுமரி வட்டார முதன்மை பணியாளர் ஜோசப் ரொமால்ட் தலைமை தாங்க, தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்றனி மறையுரையாற்றினார்.

இதில் ஆலய பங்குத்தந்தை ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை மைக்கேல் நியூமேன் ஆகியோர் கலந்து கொண்டனர். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதில் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 18-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 19-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து ஆகியவை நடைபெறுகிறது. விழாவையொட்டி ஆலயம் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News