ஆன்மிகம்

சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா

Published On 2019-05-09 03:59 GMT   |   Update On 2019-05-09 03:59 GMT
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் ஆகியவை நடக்கிறது. 11-ந்தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. 18-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி, 19-ந்தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்குபேரவை, பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News