கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலய பொன்விழா ஆண்டையொட்டி ஆடம்பர சப்பர பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்று இரவு 8.30 மணிக்கு ஆடம்பர சப்பர பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பின்னர் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 6.30 மணிக்கு திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்றது.
விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்தந்தை அடைக்கலராஜ் மற்றும் திருச்சிலுவை கன்னியர்கள், பட்டையதாரர்கள், இளைஞர்கள், பொன்விழா குழுவினர் செய்திருந்தனர்.