ஆன்மிகம்

குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2019-01-03 03:56 GMT   |   Update On 2019-01-03 03:56 GMT
நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை நடக்கிறது. 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி வைத்து மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, இரவு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

6-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.

12-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதில் புன்னை நகர் பங்குத்தந்தை சாலமன் தலைமையில் அமெரிக்க அருட்பணியாளர் தாமஸ் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கும், மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், ஆராதனையும் நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் மைக்கல் ஆஞ்சலுஸ் தலைமையில் நாகர்கோவில் பங்குத்தந்தை ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுளை பங்கு அருட்பணியாளர் பிரான்சிஸ் ம.போர்ஜியா தலைமையில் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News