‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக் ‘கிறோம்’. (ரோமர் 8:28)
‘அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை, சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்’ (எபி.4:13).
மனுஷனுடைய வழிகள் இறைவனின் கண் களுக்கு முன்பாக இருக்கிறது. அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார். அவருடைய பார்வைக்கு மறை வானது ஒன்றுமில்லை. உலகம் முழுவதும் அவர் பார்வைக்கு எல்லாமே வெளியரங்கமாய் இருக்கிறது.
தேவன் என்னை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற சிந்தையுடன் வாழவேண்டும். நாம் தனிப்பட்ட செயல்களில் தவறு செய்தால், அவர் பார்க்கவில்லை என்று நினைப்பது தவறு.
சங்கீதக்காரன் தாவீது சொல்லுகிறார், ‘நான் உட்கார்ந்தாலும், நடந்தாலும், படுத்திருந்தாலும் எல்லாமே நீர் அறிந்திருக்கிறீர். என் நினைவு களைத் தூரத்திலிருந்து அறிகிறீர். என் நாவில் சொல்பிறவாவதற்கு முன்னே அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். நமது வாழ்க்கையைப் பற்றிய கணக்கை அவருக்கு ஒப்புவிக்க வேண்டும். அவரை யாரும் ஏமாற்ற முடியாது’.
தீமைகள்
‘பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை’. (3 யோவா. 1:11)
நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. பிறருக் கு நன்மை செய்கிறவனை தேவன் பார்க்கிறார். தீமை செய்கிறவன் ஒருபோதும் தேவனை காணமாட்டான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்கள். நன்மையை யோசிக்கிறவர்கள் செழிப்பார்கள். துன்மார்க்கன் தன் தீமையிலே வீழ்ச்சி அடைவான். நன்மை செய்கிறவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
மனுஷனின் இருதயம் தீமையினால் நிறைந் திருக்கிறது. புரட்டு நாவுள்ளவர்கள் தீமையில் விழுவார்கள். சுத்தமான நாவுள்ளவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். தீமையை வெறுப்பதே தேவனுக்கு பயப்படும் பயம். நன்மையை சிந்திப்பதே தேவனுக்கு பிரியம். தீமையை விட்டு விலகி நன்மையை செய்து சமாதானத்தைத் தேடி அதைத் தொடர்ந்து பற்றிக்கொள்.
நன்மைகள்
‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக் ‘கிறோம்’. (ரோமர் 8:28)
நீ பிறருக்கு நன்மை செய்தால் உனக்கு மேன்மை உண்டு. நன்மை செய்கிறவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். தெய்வத்தை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைபடாது. உன் நிலத்தின் கனியிலும் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். மாறுபாடான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் கண்டடைவதில்லை.
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மை செய்வார். நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். இருதயத்தில் செம்மையானவர்களுக்கு நன்மைகள் பெருகும். நீங்கள் பிழைக்கும்படி நன்மையைத் தேடுங்கள். நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
‘ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்’. (பிரசங்கி 12:14)
‘தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ’ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கி பார்த்தார். எல்லோரும் வழி விலகி ஏகமாய்க் கெட்டுப் போனார்கள். நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. தேவன் நன்மை செய்கிற நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார்.
அவன் தீமைகள் அவன் சிரசின் மேல் திரும்பும். அவன் கொடுமை அவன் உச்சந்தலையின் மேல் இறங்கும். தன் பாவங்களை மறைக்காமல் அறிக்கைசெய்து தீமையை விட்டுவிலகினால் இரக்கம் பெறுவான்.
தேவன் மனுஷனை செம்மையானவனாக உண்டாக்கினார். அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நீ நடந்தாலும். எல்லாவற்றையும் தேவன் உன்னை நியாயத் தீர்ப்பிலே கொண்டு வருவார். நன்மை செய்கிறவர்கள் நித்திய ராஜ்ஜியத்திலே பிரவேசிப்பார்கள், ஆமென்.
ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50.