ஆன்மிகம்
இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை இருதயராஜ் கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பல் பூசியதை படத்தில் காணலாம்.

சாம்பல் புதனையொட்டி தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

Published On 2019-03-07 03:31 GMT   |   Update On 2019-03-07 03:31 GMT
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு 40 நாட்களுக்கு முன்னதாக தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு 40 நாட்களுக்கு முன்னதாக தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கடந்த ஆண்டில் குருத்தோலை ஞாயிறு அன்று ஆலயங்களில் வழங்கப்பட்ட குருத்தோலைகளை தங்களது இல்லங்களுக்கு கொண்டு சென்று சிலுவையாக உருமாற்றம் செய்யப்பட்டதை மீண்டும் ஆலயத்திற்கு கொண்டு வந்து எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டின் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தஞ்சை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு பங்குத்தந்தை இருதயராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக கிறிஸ்தவர்கள் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்தோலையை வீட்டில் இருந்து எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை எரித்து நெற்றியில் பூசிக்கொண்டனர்.

இதேபோல் சாம்பல் புதனையொட்டி தஞ்சையில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடு நடக்கும். அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியும், 21-ந்தேதி இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
Tags:    

Similar News