தொடர்புக்கு: 8754422764

கர்வத்துக்கும், ஏக்கத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம் - சர்வம் தாள மயம் விமர்சனம்


அவங்களுக்கு தோல் முக்கியம். நமக்கு தொழில் முக்கியம், உங்களுக்கெல்லாம் கவர்மெண்ட் காலேஜ் கோட்டால சீட்டு கிடைக்குமே... இங்கே ஏன் கத்துக்க வர்றே... என வசனங்கள் சமகால சூழ்நிலையை பிரதிபலிக்கின்றன. கல்லுல இருந்து சிற்பம் வரலைன்னா அது சிற்பியோட தப்பு போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் இன்னொரு கதாநாயகனாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உயிரோட்டத்தை கொடுத்துள்ளது. லைவ் ரெக்கார்டிங் என்பதை நம்பவே முடியவில்லை. பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கின்றன. ரவி யாதவ்வின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் கச்சிதம்.

மொத்தத்தில் `சர்வம் தாள மயம்' இசையின் வெற்றி. #SarvamThaalaMayamReview  #SarvamThaalaMayam #GVPrakashKumar #AparnaBalamurali #NedumudiVenu #Vineeth #RajivMenon #ARRahman