சினிமா

காற்றின் மொழி

Published On 2018-11-14 04:42 GMT   |   Update On 2018-11-14 04:42 GMT
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் முன்னோட்டம். #KaatrinMozhi #Jyothika
பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள படம் காற்றின் மொழி.

ஜோதிகா ஆர்.ஜே.வாக நடித்திருக்கும் இந்த படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இசை - ஏ.எச்.காஷிப், படத்தொகுப்பு - பிரவின்.கே.எல்., ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, கலை இயக்குனர் - கதிர், சண்டைப்பயிற்சி - நடனம் - விஜி சதிஷ், உடை வடிவமைப்பாளர் - பூர்ணிமா ராமசாமி, பாடலாசிரியர் - மதன் கார்க்கி, தயாரிப்பு - தனஞ்ஜெயன், தயாரிப்பு நிறுவனம் - பாப்டா மீடியா, கதை - சுரேஷ் திரிவேனி, வசனம் - பொன் பார்த்திபன், இயக்கம் - ராதாமோகன்.



படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜோதிகா பேசியதாவது,

ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது. என்றார். 

படம் வருகிற நவம்பர் 16-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KaatrinMozhi #Jyothika

Tags:    

Similar News