சினிமா

எனக்கும் கேமரா மேனுக்கும் லின்கா? - நிக்கி கல்ராணி பேட்டி

Published On 2019-04-04 11:56 GMT   |   Update On 2019-04-04 11:56 GMT
ஜீவாவுடன் கீ படத்தில் நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, கேமரா மேனுடன் லின்க் இருக்கா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #Kee #NikkiGalrani
சார்லின் சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது ‘கீ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். காலீஸ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நிக்கி கல்ராணி மாலைமலருக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு,

கீ தலைப்பு கேட்டவுடன் உங்களுக்கு நினைவில் வந்தது?

‘கீ’ என்ற தலைப்பு கேட்டவுடன் பூட்டுக்கு தேவைப்படும் சாவி தான் நினைவிற்கு வந்தது. ஆனால், இயக்குனர் அந்த கீ இல்லை என்றார். நாம் எந்த செயல் செய்தாலும் அதில், நல்லதும் கெட்டதும் நடக்கும். கெட்டதிலும் நல்லது நடக்கும். அதுதான் கீக்கு அர்த்தம். கதையை கேட்டவுடன் தலைப்புக்கான அர்த்தம் புரிந்தது.

இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம்?

நான் இந்த படத்தில் தியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நம் அன்றாட வாழ்வில் புதிய டெக்னாலஜியுடன் கூறிய மொபைல் போனை பயன்படுத்தி வருகிறோம். ஒரு ஹாக்கர் மூலம் நம்முடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படம். 



பெண்கள் மொபைல் போனை பாதுகாப்பாக உபயோகப்படுத்த வேண்டுமா?

பெண்கள் மட்டும் இல்லை. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தான் இப்படமாக உருவாகியுள்ளது.

ஜீவாவுடன் நடித்த அனுபவம்?

ஜீவாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கீ படம் நானும் ஜீவாவும் நடித்த முதல் படம், ஆனால், கலகலப்பு 2 முதலில் ரிலீஸ் ஆனது. நாங்கள் இருவரும் துறுதுறுவாக இருப்போம். படப்பிடிப்பில் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். ஜாலியாக பலரை கலாய்த்துக் கொண்டே இருப்போம். எங்கள் கிட்ட இயக்குனர்தான் மிகவும் மாட்டிக்கொண்டார். படப்பிடிப்பில் அவ்வளவு ஜாலியாக இருக்கும்.

இயக்குனர் காலீஸ் பற்றி?

புது இயக்குனர். மிகவும் பொறுப்புடன் இந்த கதையை தேர்ந்தெடுத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார். 



இசை பற்றி?

படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். எனக்கும் ஜீவாவிற்கும் ஒரு டூயட் சாங் இருக்கிறது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மற்ற பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

கதாநாயகிகள் தங்களை அழகாக காட்டுவதற்காக கேமரா மேனுடன் லின்க் வைத்திருப்பார்கள்? அதுபோல் நீங்களும் லின்க் வைத்திருக்கிறீர்களா? 

எனக்கும் கேமரா மேனுக்கும் லின்க் எல்லாம் ஒன்றும் இல்லை. நான் என் வேலையை பார்த்தேன். அவர், அவர் வேலையை பார்த்தார். திரையில் பார்க்கும் போது காட்சிகள் அழகாக இருக்கும். 

படம் பார்த்துட்டு எப்படி ரியாக்ட் செய்வார்கள்?

இந்த படம் எல்லாம் தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். 4 வயது குழந்தை முதல் 70 வயது உள்ளவர்கள் வரை ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். இப்படம் தற்போதைய விழிப்புணர்வு படம் என்றே சொல்லலாம். 

இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.
Tags:    

Similar News