தொடர்புக்கு: 8754422764

சூர்யா வில்லனிடம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக சூர்யா வில்லனிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.

பதிவு: மே 21, 2019 19:40

தனுஷின் பக்கிரி படத்தின் போஸ்டர் வெளியீடு

மாரி 2 படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 21, 2019 18:56

விஜய் - அஜித் அரசியல் வருகை பற்றி எஸ்.ஜே.சூர்யா

பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் - அஜித் ஆகியோர் அரசியல் வருகை குறித்து கூறியிருக்கிறார்.

பதிவு: மே 21, 2019 17:54

இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி

லிசா படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் சாம் ஜோன்ஸ்-க்கு முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கிறார்.

பதிவு: மே 21, 2019 17:00

அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுகிறார்கள் - எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என்ற விழிப்புணர்வு படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுவதாக கூறினார்.

பதிவு: மே 21, 2019 14:36

விஜய் சேதுபதி - பிஜூ விஸ்வநாத் இணையும் சென்னை பழனி மார்ஸ்

விஜய் சேதுபதி தயாரிப்பில், பிஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சென்னை பழனி மார்ஸ் படம் முழுக்க முழுக்க பயணத்தை மையப்படுத்திய காமெடி படமாக உருவாகி இருக்கிறது.

பதிவு: மே 21, 2019 14:21

பிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அப்டேட்: மே 21, 2019 14:41
பதிவு: மே 21, 2019 12:49

காதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்

காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதி ராவ் தனக்கு வந்த காதல் கடிதத்தை தனது அம்மாவிடம் காட்டி பெருமைபட்டதாக கூறியுள்ளார்.

பதிவு: மே 21, 2019 12:18

நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்

தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

பதிவு: மே 21, 2019 11:41

வெங்கட் பிரபு - சிம்புதேவன் இணையும் கசட தபற

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அப்டேட்: மே 21, 2019 14:42
பதிவு: மே 21, 2019 11:13

விக்ரமின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

`கடாரம் கொண்டான்', `மஹாவீர் கர்ணா' படங்களை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 21, 2019 09:26

தனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாரி 2 படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 21, 2019 08:32

சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா, நடிகர் சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பதிவு: மே 20, 2019 17:53

ஹீரோக்களுடன் நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஹீரோக்களுடன் நடிக்க தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 20, 2019 17:21

மெர்சல், காலா வரிசையில் என்.ஜி.கே

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்.ஜி.கே திரைப்படம் விஜய்யின் மெர்சல், ரஜினியின் காலா வரிசையில் வெளியிட இருக்கிறார்கள்.

பதிவு: மே 20, 2019 16:26

தர்பார் படத்தின் கதை கசிந்தது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் கதையை பற்றி இந்தி நடிகர் கொடுத்த பேட்டியின் மூலம் கசிந்துள்ளது.

பதிவு: மே 20, 2019 15:53

ராஜு முருகன் சட்டமன்றத்துக்கு செல்ல வாழ்த்துகிறேன் - கரு.பழனியப்பன்

ஜிப்ஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கரு.பழனியப்பன், ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துவதாக தெரிவித்தார்.

பதிவு: மே 20, 2019 14:24

இம்சை அரசன் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் - சிம்புதேவன்

வடிவேலு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் அடுத்த பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று நம்புவதாக இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 20, 2019 12:21

பார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன் - பாக்யராஜ் பாராட்டு

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பாராட்டினார்.

பதிவு: மே 20, 2019 11:09

காரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி

ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 20, 2019 13:05
பதிவு: மே 20, 2019 10:53

மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் - விவேக் பேட்டி

பள்ளிகளில் அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் கொடைக்கானலில் விவேக் கூறினார்.

பதிவு: மே 20, 2019 10:25