ஆட்டோமொபைல்

விரைவில் பி.எஸ். 6 ரக வாகனங்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா

Published On 2019-06-04 06:45 GMT   |   Update On 2019-06-04 06:45 GMT
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் விரைவில் மேம்படுத்த இருக்கிறது.



மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாருதி சுசுகி டீசல் என்ஜின் உள்ள கார்களை ஏப்ரல் 1, 2020 முதல் விற்பனை செய்யாது என ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், மஹிந்திரா தனது முதல் பி.எஸ். 6 ரக வாகனத்தை மூன்று அல்லது நான்கு மாதங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.



மஹிந்திரா நிறுவனம் முதற்கட்டமாக பி.எஸ். 6 பெட்ரோல் மாடல்களை அறிமுகம் செய்து அதன் பின் பி.எஸ். 6 டீசல் மாடல்களை 2019 இறுதியிலோ அல்லது 2020 துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. பி.எஸ். 6 தளத்தில் மொத்தம் எட்டு டீசல் என்ஜின் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

பி.எஸ். தளத்தில் மட்டும் மொத்தம் 16 பிளாட்ஃபார்மில் 38 வேரியண்ட்களில் பயன்படுத்திக் கொள்ள மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதில் இலகு ரக வர்த்தக வாகனங்கள், பயணர் வாகனங்கள் மற்றும் மூன்று முற்றிலும் புதிய மாடல்கள் அடங்கும். ஏற்கனவே பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 மாடல்கள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.



இத்துடன் மஹிந்திரா நிறுவனம் தனது கே.யு.வி. 100 டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் வாகனங்களின் விவரங்களையும் வழங்கி இருக்கிறது. அந்த வகையில் அந்நிறுவனம் மொத்தம் எட்டு பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் மாடல்களும், இதில் இரண்டு மாடல்கள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எட்டு பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின்களும் 12 மாடல்களில் 8 பிளாட்ஃபார்மில் உருவாகிறது. பி.எஸ். 6 ரக பெட்ரோல் என்ஜின்களை உருவாக்க மஹிந்திரா நிறுவனம் ஃபோர்டு மற்றும் சங்யோங் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறது. மேலும் மராசோ மாடலின் பெட்ரோல் கார் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News