ஆட்டோமொபைல்

மஹிந்திரா டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-05-04 11:24 GMT   |   Update On 2019-05-04 11:24 GMT
அசத்தல் அம்சங்களுடன் மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Mahindra



மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய டி.யு.வி.300 விலை ரூ.8.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. புதிய 2019 டி.யு.வி.300 கார் பிரத்யேக எஸ்.யு.வி. வடிவமைப்பில் கிடைக்கும் ஒரே காம்பேக்ட் எஸ்.யு.வி. என மஹிந்திரா தெரிவித்துள்ளது. 

புதிய கார் முந்தைய மாடலை விட அதிக கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதில் பியானோ பிளாக் முன்புற கிரில், பிளாக் க்ரோம் இன்சர்ட்கள், X வடிவம் கொண்ட ஸ்பேர் வீல் கவர் மற்றும் புதிய ஹெட்லேம்ப் வடிவமைப்பில் பகலில் எரியும் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.



காரின் உள்புறம் பினின்ஃபரினா வடிவமைப்பு செய்யப்படுகிறது. இதில் சில்வர் நிற அக்சென்ட்கள் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. புதிய 2019 மஹிந்திரா டி.யு.வி.300 புதுவித ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜி.பி.எஸ். இன்டகிரேஷன், ஸ்டேடிக் பென்டிங் ஹெட்லேம்ப்கள் மற்றும் மைக்ரோ-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

புதிய 2019 மஹிந்திரா டி.யு.வி.300 மாடலில் எம்ஹாக்100, 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. வாகனத்தை ஓட்டும் போது சவுகரிய அனுபவம் வழங்க குஷன் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் மற்றும் ஆப்டிமைஸ்டு ரைடு ஹைட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் புதிய டி.யு.வி.300 மாடல்: ஹைவே ரெட் மற்றும் மிஸ்டிக் காப்பர் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர ரெட் மற்றும் பிளாக், சில்வர் மற்றும் பிளாக், போல்டு பிளாக், மெஜஸ்டிக் சில்வர் மற்றும் பியல் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News