ஆட்டோமொபைல்

2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் அறிமுகம்

Published On 2019-03-31 11:21 GMT   |   Update On 2019-03-31 11:21 GMT
ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honda



ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடல் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இதன் விலை 99,800 பட் (இந்திய மதிப்பில் ரூ.2.16 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 2019 சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் புதிய பெயின்ட் ஸ்கீம் மற்றும் பிரேக் கேலிப்பர்களில் ரெட் நிற டிடெயிலங் செய்யப்பட்டுள்ளது. சி.பி.300ஆர் மாடலை போன்றே புதிய சி.பி.150ஆர் மாடலும் நியூ-ரெட்ரோ ஸ்டைலிங் செய்யப்பட்டிருக்கிறது. ஹோன்டா சி.பி.150ஆர் மோட்டார்சைக்கிள் முன்னதாக 2017 பேங்காக் சர்வதேச மோட்டார் விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. 



சி.பி.150ஆர் மோட்டார்தைக்கிளில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சம் 20 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் என்றும் இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஹோன்டா சி.பி.150ஆர் மாடலின் முன்புறம் 41எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது. 

பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் 296 எம்.எம். மற்றும் பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். ஸ்டேன்டர்டு வசதியாக வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹோன்டா சி.பி.300ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது.
Tags:    

Similar News