மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு துவங்குகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம். #Ciaz #Maruti
மாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவுகள் துவங்குகின்றன
பதிவு: ஆகஸ்ட் 09, 2018 17:20
2018 மாருதி சுசுகி ஃபேஸ்லிஃப்ட் சியாஸ் மாடலின் முன்பதிவுகள் ஆகஸ்டு 10-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படுகிறது. நெக்சா விற்பனையகங்கள் அல்லது நெக்சா வலைதளம் சென்று ரூ.11,000 செலுத்தி புதிய காரினை முன்பதிவு செய்யலாம். மேம்படுத்தப்பட்ட சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் சில காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய கார் அறிமுகம் தாமதமாக நாடு முழுக்க இயங்கி வரும் நெக்சா விற்பனை மையங்கள் தற்போதைய சியாஸ் செடான் மாடல் காரினை விற்று தீர்க்க முடியும் என கூறப்படுகிறது. அனைத்து யூனிட்களையும் விற்றுத்தீர்க்க பல்வேறு விற்பனையாளர்கள் செடான் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் ரூ.1.3 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட சியாஸ் கார் ஹோன்டா சிட்டி, ஹூன்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா யாரிஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியாஸ் மாடலில் புதிய அம்சங்கள், உயர் ரக இன்டீரியர் அம்சங்கள் மற்றும் தலைசிறந்த செயல்திறன் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
>
இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில்-லேம்ப் இன்சர்ட்கள், டேடைம் ரன்னிங் லைட்களை மாருதி புதிய காரில் வழங்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் கிரில் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை புதிதாக வெளிப்படும் என்றும் இது தற்சமயம் இந்தோனேஷியாவில் விற்பனையாகும் புத்தம் புதிய எர்டிகா மாடலை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.
சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #MarutiSuzuki #Ciaz