ஆட்டோமொபைல்

பி.எம்.டபுள்யூ.வின் புத்தம் புதிய X1 கார் அறிமுகம்

Published On 2019-06-01 12:17 GMT   |   Update On 2019-06-01 12:17 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 X1 கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X1 கார் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. புதிய கார் 1 சீரிஸ் ஹேட்ச்பேக் மாடலின் புத்தம் புதிய கார் ஆகும். 2020 X1 காரில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய நிறங்கள் மற்றும் உள்புற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காரின் வெளிப்புறம் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய காரில் மேம்பட்ட ஹெட்லைட் வடிவைப்பு, அடாப்டிவ் எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் L வடிவம் கொண்ட டெயில்பைப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டு-டோன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய X1 கார்: ஸ்டாம் பே மெட்டாலிக், ஜுகாரோ பெய்க் மற்றும் மிசானோ புளு மெட்டாலிக் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. பி.எம்.டபுள்யூ. வாகனங்களின் உள்புறம் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட கண்ட்ரோல் வழக்கமான ஆப்ஷனாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படும் நிலையில் புதிய X1 காரில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.



இதன் சென்டர் டிஸ்ப்ளேவில் பி.எம்.டபுள்யூ. கனெக்ட்டெட் டிரைவ், நேவிகேஷன் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. புதிய X1 காரில் 1.5 லிட்டர் ட்வின் டர்போ sDrive16d டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 117 பி.எஸ். பவர், 270 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

இத்துடன் 2.0 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் 234 பி.எஸ். பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரோனிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. பெட்ரோல் X1 xDrive25i என்ஜின் 234 பி.எஸ். பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இந்தியாவில் தற்போதைய பி.எம்.டபுள்யூ. X1 மாடல் விலை ரூ.35.20 ல்ட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.45.70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News