ஆட்டோமொபைல்

ஃபெராரி ஹைப்ரிட் சூப்பர்கார் டீசர் வெளியானது

Published On 2019-05-29 11:37 GMT   |   Update On 2019-05-29 11:37 GMT
ஃபெராரி நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



ஃபெராரி நிறுவனம் தனது புதிய சூப்பர்காரின் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தசாப்தங்களில் ஃபெராரி சூப்பர்கார் மாடல்கள் செயல்திறன் அடிப்படையில் அதிகளவு மாற்றங்களை பெற்றிருக்கிறது. 

அந்த வரிசையில் ஃபெராரி 488 GTB டர்போசார்ஜ் செய்யப்பட்ட முதல் மாடலாக இருந்தது. காரின் வெளிப்புறம் பார்க்க ஃபெராரி 488 பிஸ்தா மற்றும் எஃப்8 ட்ரிபுடோ மாடல்களை தழுவி உருவாகி இருப்பதை உணர்த்துகிறது. டீசர் வீடியோவின் படி புதிய சூப்பர்காரில் ரேசர்-ஷார்ப் ப்ரோஃபைல் காரின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.



இதன் ஆங்குலர் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், பின்புறம் குவாட் டெயில்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் எக்சாஸ்ட் பைப்களும், ஸ்பாயிலரும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய சூப்பர்கார் 3.9 லிட்டர் பை-டர்போ வி8 மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மோட்டார் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வரும் என கூறப்படுகிறது. இதில் இரு மோட்டார்கள் முனபு்ற ஆக்சிலிலும், ஒன்று கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும் என தெரிகிறது.

ஆல்-வீல் டிரைவ் செட்டப் கொண்டிருக்கும் புதிய சூப்பர்கார் 972 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மணிக்கு மூன்று இலக்க வேகத்தை வெறும் 2.0 நொடிகளில் எட்டும் திறன் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News