ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பையர் புளு அறிமுகம்

Published On 2019-05-11 11:08 GMT   |   Update On 2019-05-11 11:08 GMT
ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது ஸ்பையர் செடான் காரின் புளு எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.



ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் செடான் ஆஸ்பையர் காரின் ஸ்பெஷல் புளு எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆஸ்பையர் புளு கார் அழகிய வடிவமைப்பு, சிறப்பான தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆஸ்பையர் புளு பெட்ரோல் எடிஷன் விலை ரூ.7,50,900 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டீசல் எடிஷன் விலை ரூ.8,30,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆஸ்பையர் புளு: வைட், மூன்டஸ்ட் சில்வர் மற்றும் ஸ்மோக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் 3-சிலிண்டர், 1.2 லிட்டர் TiVCT பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 93 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது லிட்டருக்கு 20.4 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 



ஆஸ்பையர் புளு டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் TDCi என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது லிட்டருக்கு 26.1 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் பிரீமியம் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், 15-இன்ச் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அழகிய புளு தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரிங் வீல் லெதர் ராப் செய்யப்பட்டுள்ளது. கேபினில் புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் யு.எஸ்.பி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஃபோர்டு ஆஸ்பையர் புளு காரில் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.), இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7-இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, பின்புற கேமரா, ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், தானியங்கி ஏ.சி. மற்றும் பவர் விண்டோ வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News