ஆட்டோமொபைல்

ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாகும் வேகன் ஆர்

Published On 2019-05-08 07:09 GMT   |   Update On 2019-05-08 07:09 GMT
மாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வகையில் வேகன் ஆர் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #MarutiSuzuki



மாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வரையில் எம்.பி.வி. கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாவதாக கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் ஏழு பேர் அமரக்கூடிய எம்.பி.வி. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் கார் நெக்சா விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேகன் ஆர் கார் பற்றி மாருதி சுசுகி இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.



மாருதியின் புதிய வேகன் ஆர் கார் விற்பனை முந்தைய மாடல்களை விட குறைந்திருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக இதன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய மாடல்களை போன்று புதிய வேகன் ஆர் கார்கள் விற்பனையாகவில்லை.

எனினும், ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய வேகன் ஆர் விற்பனை அதிகரிக்கும் என மாருதி சுசுகி நம்புகிறது. இந்தியாவில் மாருதி வேகன் ஆர் எம்.பி.வி. கார் புதிய நேம்பிளேட் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் அறிமுகமாகும் முன், வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. கார் சோலியோ என்ற பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியானது.

புதிய வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே என்ஜின் புதிய மாருதி வேகன் ஆர் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் AGS டிரான்ஸ்மிஷன்  உடன் கிடைக்கிறது.
Tags:    

Similar News