ஆட்டோமொபைல்

புதிய என்ஜினுடன் இந்தியாவில் அறிமுகமான மாருதி எர்டிகா

Published On 2019-04-30 09:53 GMT   |   Update On 2019-04-30 09:53 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது எர்டிகா காரில் புதிய என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MarutiErtiga



மாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா எம்.பி.வி. காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி எர்டிகா VDi பேஸ் வேரியண்ட் மாடல் விலை ரூ.9.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் ZDi பிளஸ் வேரியண்ட் விலை ரூ.11.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய என்ஜின் மாருதி சுசுகி உற்பத்தி செய்ததாகும். இது 1.3 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. இது மாருதி எர்டிகா VDi, ZDi மற்றும் ZDi பிளஸ் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர், 225 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது.



இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. பழைய 1.3 லிட்டர் யூனிட் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய டீல் என்ஜின் 1.3 லிட்டர் ஃபியாட் என்ஜின் ARAI சான்று பெற்று லிட்டருக்கு 24.02 கிலோமீட்டர் செல்லும் என தெரிகிறது.
Tags:    

Similar News