ஆட்டோமொபைல்

விரைவில் இந்தியா வரும் மேம்பட்ட மாருதி ஆல்டோ 800

Published On 2019-04-23 10:32 GMT   |   Update On 2019-04-23 10:32 GMT
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் மேம்பட்ட மாருதி ஆல்டோ 800 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #MarutiSuzuki



மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட ஆல்டோ 800 கார் விற்பனை மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. புதிய ஹேட்ச்பேக் காரில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்படும் வகையில் இந்த காரில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 போன்றே புதிய ஆல்டோ 800 மாடலிலும் ஏ.பி.எஸ்., இ.பி.டி., டிரைவர் சைடு ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிரைவர், கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் ஆட்டோமோடிவ் தரத்தின் 145 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டதாகும்.

பாதுகாப்பு அப்டேட்கள் தவிர புதிய ஆல்டோ காரில் புதிய பம்ப்பர் மற்றும் கிரில் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய அப்டேட் மூலம் ஆல்டோ 800 பெயரை நீக்கிவிட்டு புதிய மாடலில் வெறும் ஆல்டோ பேட்ஜ் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.



2019 மாருதி சுசுகி ஆல்டோ உள்புறம் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆல்டோ K10 காரில் வழங்கப்பட்டிருக்கும் அதே டேஷ்போர்டு மற்றும் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ஆல்டோ 800 உள்புறம் டூயல்-டோன் கருப்பு மற்றும் பெய்க் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த காரின் மியூசிக் சிஸ்டத்தில் யு.எஸ்.பி. மற்றும் ஆக்ஸ் (AUX) வசதி சேர்க்கப்படுகிறது. புதிய மாருதி ஆல்டோ காரில் 796சிசி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 48 ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த என்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

புதிய மாருதி ஆல்டோ காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதன் விலை தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட ஆல்டோ கார் இந்தியாவில் டேட்சன் ரெடிகோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News