ஆட்டோமொபைல்

ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-04-04 11:24 GMT   |   Update On 2019-04-04 11:24 GMT
ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #CompassSportPlus



ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் கார் இந்தியாவில் ரூ.15.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் கார் ஸ்போர்ட் மற்றும் லாங்கிடியூட் வேரியண்ட்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரில் 16-இன்ச் அலாய் வீல்கள், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், பிளாக் ரூஃப் ரெயில்கள் மற்றும் பின்புறம் பார்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட் மற்ற வேரியணட்களை போன்றே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.



இந்த என்ஜின் 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் வழங்குகிறது. இத்துடன் 1.4 லிட்டர் மல்டிஏர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 162 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

இந்திய எஸ்.யு.வி. சந்தையில் ஜீப் காம்பஸ் கார் அதிக பிரபல மாடலாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் ஜீப் காம்பஸ் இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500, டாடா ஹேரியர் மற்றும் நிசான் கிக்ஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News