ஆட்டோமொபைல்

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-02-15 11:17 GMT   |   Update On 2019-02-15 11:17 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.யு.வி. 300 கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. #MahindraXUV300 #Car



மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி. 300 காரை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.யு.வி. 300 விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனலவே துவங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

புதிய எக்ஸ்.யு.வி.300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

புதிய எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.



இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

புதிய எக்ஸ்.யு.வி. 300 காரில் எல்.இ.டி. ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் இக்னிஷன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும், 3-பாயிண்ட் சீட் பெல்ட், ஐசோஃபிக்ஸ், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News