ஆட்டோமொபைல்

டாடா மோட்டார்ஸ் புதிய ஹேட்ச்பேக் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-01-31 11:31 GMT   |   Update On 2019-01-31 11:31 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #TataMotors #Car



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது அடுத்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலின் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 

டாடா 45X கான்செப்ட் மாடலை தழுவி உருவாகியிருக்கும் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் மயான்க் பரீக் தெரிவித்தார். 

ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்த X451 கார் தான் எங்களது அடுத்த அறிமுகமாக இருக்கும். ஹேரியர் மற்றும் X451 கார்கள் இந்த ஆண்டு அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அந்த வகையில் ஏற்கனவே ஹேரியர் காரை அறிமுகம் செய்துவிட்டோம். அடுத்த ஆறு மாதங்களில் மற்றொரு புதிய காரை அறிமுகம் செய்வோம் என அவர் தெரிவித்தார்.



அந்த வகையில் டாடாவின் புதிய ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். டாடாவின் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் மாருதி பலேனோ, ஹோன்டா ஜாஸ், ஹூன்டாய் i20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா 45X கார் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி டாடா 45X மாடலின் இன்ஸ்ருமென்ட் கிளஸ்டரில் அனலாக் டையல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ஏ.சி. வென்ட்கள் டேஷ்போர்டின் இருபுறம் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது. 

இதன் சென்டர் கன்சோலில் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் மற்றும் டேஷ்போர்டு முழுக்க கருப்பு நிற தீம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் டாடா 45X மாடல் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இம்பேக்ட் டிசைன் 2.0-வை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஸ்போர்ட் தோற்றத்தில் பெரிய சக்கரங்கள் மற்றும் வீல் ஆர்ச்களை கொண்டிருக்கிறது. #TataMotors #Car
Tags:    

Similar News