ஆட்டோமொபைல்

மாருதி சுசுகி புதிய வேகன்ஆர் முன்பதிவு துவங்கியது

Published On 2019-01-14 15:02 GMT   |   Update On 2019-01-14 15:02 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன்ஆர் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம் மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #WagonR



மாருதி சுசுகி நிறுவனம் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியது. 2019 வேகன்ஆர் கார் முன்பதிவு செய்ய ரூ.11,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆர் மாடல் 2019, ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் வேகன்ஆர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது. 

வேகன்ஆர் மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது. 



புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #WagonR
Tags:    

Similar News