ஆட்டோமொபைல்

இந்தியாவில் மாருதி ஆம்னி நிறுத்தப்படுகிறது

Published On 2018-10-28 11:14 GMT   |   Update On 2018-10-28 11:14 GMT
இந்தியாவில் பல ஆண்டுகளாக பிரபல கார் மாடல்களில் ஒன்றாக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆம்னி கார் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #MarutiOmni



இந்தியாவில் மாருதி ஆம்னி கார் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 2020ம் ஆண்டில் இருந்து பி.எஸ். IV ரக கார்களுக்கு அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதைத் தொடர்ந்து மாருதி நிறுவனம் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் வரயிருக்கும் சில பாதுகாப்பு விதிமுறைகளை சில மாடல்கள் பின்பற்ற முடியாத சூழல் ஏற்படும், இதில் மாருதி ஆம்னி கார் மாடலும் ஒன்றாக இருக்கும் என மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார். மாருதி 800 போன்றே மாருதி ஆம்னி மாடலையும் நிறுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மாருதி ஆம்னி மாடலின் முன்பக்கம் மட்டமாக இருப்பதால், பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உடன்படாது. விபத்தின் போது காரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இதனால் மாருதி நிறுவனம் ஆம்னி மாடலை நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.   



மாருதி ஆம்னி போன்றே மாருதி இகோ, ஆல்டோ 800 போன்ற மாடல்களும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு பொருந்தாது. இரண்டு கார்களையும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த திட்டமிடப்படுவதாக பார்கவா தெரிவித்தார். மேலும் இரண்டு மாடல்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த பெருமளவு மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மாருதி ஆம்னி மாடலில் 796சிசி, 3-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் 59 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாருதி ஆம்னி கார் 1984ம் ஆணஅடு அறிமுகம் செய்யப்பட்டு பின் 1998 மற்றும் 2005ம் ஆண்டுகளில் அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
Tags:    

Similar News