ஆட்டோமொபைல்

அதிரடி அம்சங்களுடன் அறிமுகமான கவாசகி நின்ஜா இஸட்.எக்ஸ்.10ஆர்

Published On 2019-06-02 11:04 GMT   |   Update On 2019-06-02 11:04 GMT
கவசாகி நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் அதிரடி அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.



கவாசகி நிறுவனம் தனது சாகசப் பிரியர்களுக்கென மேம்படுத்தப்பட்ட நின்ஜா இசட்.எக்ஸ். 10 ஆர். மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.13.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.1.20 லட்சம் அதிகமாகும். 

இருந்தாலும் இந்திய சந்தையில் இந்தப் பிரிவில் விலை குறைந்த மோட்டார்சைக்கிளாக இது திகழ்கிறது. விலையைக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே பைக்கின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அசெம்பிள் செய்து, விற்பனைக்கு விட்டுள்ளது கவாசகி நிறுவனம். 



அதேசமயம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இதைத் தயாரித்து விற்பனை செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது நிறுவனம் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்பதிவு வந்தவுடன் கூடுதல் பதிவை நிறுவனம் நிறுத்திவிடும். புதிய மோட்டார்சைக்கிளின் முன் பதிவு தொகை ரூ.1.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

முந்தைய மாடலைக் காட்டிலும் தோற்றப் பொலிவு மட்டுமின்றி செயல்பாட்டிலும் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது 203 பி.ஹெச்.பி. திறன் கொண்டது. புதிய நின்ஜா இசட்.எக்ஸ். 10 ஆர். மோட்டார்சைக்கிளில் பை-டைரெகக்‌ஷனல் குவிக்-ஷிஃப்டர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் நின்ஜா இசட்.எக்ஸ். 10 ஆர். மோட்டார்சைக்கிள் சி.பி.ஆர். 1000ஆர்.ஆர். (ரூ.16.41 லட்சம்), பி.எம்.டபுள்யூ. எஸ் 1000.ஆர்.ஆர். (ரூ.18.05 லட்சம்) ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது விலை குறைவாக இருப்பது இதற்கு கூடுதல் சாதகமான அம்சமாகும்.
Tags:    

Similar News