ஆட்டோமொபைல்

குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கும் ஏத்தர் எனர்ஜி

Published On 2019-05-29 10:57 GMT   |   Update On 2019-05-29 10:57 GMT
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தைக்கென குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்குள் இரண்டு புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இரு ஸ்கூட்டர்களில் ஒன்று குறைந்த விலையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஜூன் மாதத்திற்குள் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ள நிலையில், உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளில் அந்நிறுவனம் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இதற்கு அந்நிறுவனம் அதிக சந்தைகளில் களமிறங்கி, குறைந்த விலையில் வாகனங்களை அறிமுகம் செய்ய வேண்டும். 

இந்தியாவில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 ஸ்கூட்டர் விலை ரூ.1.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடல் ஆகும். இது தற்சமயம் விற்பனையாகும் வழக்கமான 125சிசி ஸ்கூட்டர்களின் விலையை விட இருமடங்கு அதிகம் ஆகும்.



புதிய குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விலை குறைந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராப் ஹேன்டில், மிரர் ஸ்டாக், சைடு ஸ்டான்டு உள்ளிட்டவை ஸ்டீல் அல்லது இரும்பு மூலம் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கும் மோட்டார் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் இந்த மோட்டாரின் செயல்திறன் மற்றும் மைலேஜ் போன்றவற்றில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றே தெரிகிறது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
Tags:    

Similar News