ஆட்டோமொபைல்

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோன்டா டியோ

Published On 2019-05-07 10:12 GMT   |   Update On 2019-05-07 10:12 GMT
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோன்டா டியோ ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. #Honda



ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோன்டா டியோ ஸ்கூட்டர் இந்தியாவில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் 2002 ஆம் ஆண்டு அறிமுகமான ஹோன்டா டியோ புதிய மைல்கல் கடந்த 17 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஹோன்டா டியோ ஸ்கூட்டர் முதல் 15 லட்சம் யூனிட்கள் விற்பனையாக சுமார் 14 ஆண்டுகளை எடுத்துக் கொண்டதாக ஹோன்டா 2 வீலர் இந்தியா தெரிவித்தது.

அடுத்த 15 லட்சம் யூனிட்கள் விற்பனையாக வெறும் மூன்று ஆண்டுகள் தான் ஆனது, இது முந்தைய விற்பனையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நான்காவது பெரும் ஸ்கூட்டராக ஹோன்டா டியோ இருக்கிறது. மேலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஸ்கூட்டர்களில் டியோ முன்னணி மாடலாக இருக்கிறது.



ஹோன்டா டியோ ஸ்கூட்டர் இந்தியாவில் இருந்து நேபால், இலங்கை, மெக்சிகோ, கொலம்பியா என மொத்தம் 11 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் ஸ்கூட்டர் சந்தையில் ஹோன்டா டியோ மட்டும் சுமார் 44 சதவிகித பங்குகளை கொண்டிருக்கிறது.

புதிய ஹோன்டா டியோ மாடலில் விற்பனையை ஊக்குவிக்கும் பல்வேறு அம்சங்கள் சோர்க்கப்பட்டிருக்கிறது. ஹோன்டா டியோ ஸ்கூட்டர்: ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹோன்டா டியோ மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News