ஆட்டோமொபைல்

2019 சுசுகி இன்ட்ரூடர் 150 இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-04-06 10:10 GMT   |   Update On 2019-04-06 10:10 GMT
ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான சுசுகி இந்தியாவில் 2019 இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SuzukiIntruder



சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2019 இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 2019 சுசுகி இன்ட்ரூடர் 150 விலை ரூ.1,08,162 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 சுசுகி இன்ட்ரூடர் 150 முந்தைய மாடலை விட சிறிதளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2019 இன்ட்ரூடர் மாடல் புதிதாக மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் கியர் ஷிஃப்ட் பேட்டன் மற்றும் பிரேக் பெடல் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டுவோருக்கு சவுகரியத்தை வழங்குகிறது.

புதிய 2019 இன்ட்ரூடர் மாடலின் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோருக்கு பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. என்ட்ரி-லெவல் குரூஸ் மோட்டார்சைக்கிளில் 154.9சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



இந்த என்ஜின் 14.6 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எம் மற்றும் 14 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய இன்ட்ரூடர் 150 மாடல் லிட்டருக்கு 44 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 266 எம்.எம். டிஸ்க் பின்புறம் 220 எம்.எம். பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News